2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பயணத்தடையை மீறுவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

J.A. George   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாகாண எல்லைகள் வரையில், பஸ்களில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பஸ்களின் மூலம் சிலர் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், குறித்த பஸ் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், குறித்த பஸ்ஸை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X