Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
S.Renuka / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகளிடம், நீண்ட தூரச் சேவை பேருந்துகளால் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகளால் ஏற்படும் அநீதிகள் குறித்து சுமார் 200 புகார்கள் தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு (NTC) கிடைத்துள்ளதாக அந்த ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர போக்குவரத்து சேவை தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (20) ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தொலைபேசி இலக்கமான 1955இற்கு கிடைக்கபெற்ற இந்தப் புகார்கள் குறித்து ஏற்கெனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது குறித்து அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை 63 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்காதது தொடர்பாக 38 புகார்களும், பயணிகளிடம் கண்ணியமாகப் பேசாதது தொடர்பாக 28 புகார்களும் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் நீண்ட தூர சேவை பேருந்துகள் செய்த குற்றங்கள் குறித்து ஆணையத்திடம் புகார் தெரிவிப்பதற்கு பயணிகள் தயங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago