2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொரளையில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

S.Renuka   / 2025 ஜூலை 06 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், நடைபெறவிருக்கும் விழாவையொட்டி, பொரளையில் நாளை திங்கட்கிழமை (07) மாலை விசேட போக்குவரத்து திட்டம் ஏற்பாடுகள் செய்யப்படும் என  பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளையில் உள்ள கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெறும் விழாவில், மதப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் பொதுமக்கள் என  ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விழா நடைபெறும் நாளான திங்கட்கிழமை (07) மாலை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொரளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள கின்சி வீதி மற்றும் ஹோர்ட் பிளேஸ் முதல் நந்ததாச கோடகொட சந்திப்பு வரையிலான பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படும்.

வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .