Editorial / 2020 ஜூலை 23 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் புவனேக ஹோட்டல் கட்டடம் இடிக்கட்டமை தொடர்பிலான இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக குருநாகல் மாவட்ட மேலதிக செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இன்று (23) நீதிமன்றத்தில் பொலிஸாரினால் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் புவனேக ஹோட்டல் நடாத்திச் செல்லப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பிலான இடைக்கால அறிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (22) கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago