2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

புறக்கோட்டை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டைமத்திய பேருந்து நிலையத்தின் புணர்நிர்மான பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1964 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம், 60 ஆண்டுகளில் முதல் முறையாக பெரிய அளவிலான மேம்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.424 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புணர்நிர்மான பணிகளின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள்,மேம்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன்  புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .