2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பலாத்காரம் செய்தவருக்கு பேனையால் குத்து

Gavitha   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்த முச்சக்கரவண்டி சாரதியொருவரை, குறித்த பெண்ணின் நண்பி பேனையால் குத்தி விரட்டிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கொட்லாந்திருந்து கண்டிக்கு வந்திருந்த இரண்டு பெண்கள், கண்டி, சங்கராஜ மாவத்தையிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர். கடந்த புதுவருட தினத்தன்று, குறித்த இருவரும் வெளியில் சுற்றிப் பார்ப்பதற்கு வந்துள்ளனர்.

தங்களது வேலைகள் முடிந்தவுடன் முச்சக்கரவண்டியொன்றின் சாரதியிடம், தங்கள் இருவரையும் விடுதிக்கு கொண்டு சென்று விடுமாறு தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த சாரதி, கண்டி, ஹந்தன்ன பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அவ்விருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் குறித்த இரண்டு பெண்களில் ஒருவர் மீது பலாத்காரம் புரிய முயற்சித்துள்ளார். எனினும் குறித்த  பெண்ணுடன் இருந்த மற்றைய பெண், சாரதியை பேனையொன்றினால் குத்தி காயப்படுத்தி விரட்டியடித்துள்ளார்.

சாரதி தப்பிச் செல்லும் போது, வெளிநாட்டு பெண்களிடமிருந்த 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியொன்றையும் 30 ஆயிரம் ரூபாய் இருந்த பணப்பையையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்புடைய விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .