2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புலி தகவலால்: 86 குண்டுகள், போதைப்பொருட்கள் மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து, வவுனியாவில் 86 கைக்குண்டுகள்,    ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5,600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (21) அன்று கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை (22) அன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில்  பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .