Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, கம்பளை புப்புரஸ்ஸ பிரதேசத்திலேயே, புதன்கிழமையன்று( 18) பலூனொன்று வெடித்து விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அதிவேக இணைய வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் 'செயற்றிட்டம் லூன்' (Project Loon) இன் பலூன்களில் ஒன்றென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பலூன்கள் கடந்த 17ஆம் திகதியன்று, இலங்கையின் தெற்குப் பகுதியை வந்தடைந்தடைந்தது.
மூன்று பலூன்கள், இவ்வாறு இலங்கையின் வான்பரப்பை, நேற்று முன்தினம் வந்தடைந்ததாக, இலங்கை தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையின் முகாமைத்துவப் பணிப்பாளரான முகுந்தன் கனகே அறிவித்தார்.
முதலாவது பலூன், திங்கட்கிழமையன்று காலையில், இலங்கை வான்பரப்பை வந்தடைந்ததாகவும், தென்னமெரிக்காவிலிருந்து அது அனுப்பப்பட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, பரிசோதனையோட்டத்தில் ஈடுபடுவதற்கு, கூகுள் நிறுவனத்தின் அணியொன்று, இவ்வாரத்தின் இறுதியில், இலங்கையை வந்தடையுமெனவும், கட்டுப்பாடு, தொழில்நுட்ப விவரங்கள் தொடர்பில் அவ்வணி, பரிசோதனைகள் ஈடுபடுபடுமெனவும், கனகே மேலும் தெரிவித்தார்.
கூகுளால் வழங்கப்படும் இணைய சேவையான இக்கூட்டு முயற்சியில், இலங்கை அரசாங்கத்துக்கு 25 சதவீதப் பங்கும், 10 சதவீதம், நாட்டிலுள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் என அறிவிக்கப்படுகிறது. எஞ்சிய 65 சதவீதம், இச்சேவையை இலங்கைக்குக் கொண்டுவர, நடவடிக்கைகளை எடுத்த சமத் பலிஹபிட்டியவின் நிறுவனமான சோஷல் கப்பிற்றல் நிறுவனத்துக்கு உரியது எனக் கருதப்படுகிறது.
கூகுள் லூன் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதனூடாக, இலங்கையின் இணைய சேவையைப் பெறும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென்பதோடு, இணைய சேவைகளுக்கான கட்டணமும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago