Editorial / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிக்கும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த ஆறு பேர், போலி பணத்தாள்கள் மற்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக (கல்கிசை) கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், 'தெல்கே கசுன் தனுஷ்க பீரிஸ்' அல்லது 'கஸ்ஸா' என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினரும் ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோசடியின் பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட நபர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 02 போலி பணத்தாள்கள், 2,000 ரூபாய் பெறுமதியான 21 போலி பணத்தாள்கள் மற்றும் 91 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago