2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

போலந்து பெண்ணுக்கு பரதத்தில் ஆர்வம்

Janu   / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா  கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார்.

போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் சனிக்கிழமை (09) அன்று நடன ஆசிரியர் திருமதி மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர்.

தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.

இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அ . அச்சுதன்,ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X