2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இலங்கை தீர்மானம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த தீர்மானத்தை இலங்கை வரவேற்கின்றது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயோர்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வைச் செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்கின்றது.

இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, இலங்கை தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .