2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பலாங்கொடையில் சில வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவு இன்று (09) தளர்த்;தப்பட்ட பகுதியான பலாங்கொடை நகரில் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மருந்தகங்கள், அத்தியாவசிய உணவு பொருள் விற்பனை நிலையங்கள், இறைச்சிக் கடைகள், மரக்கறி விற்பனை நிலையங்கள், டயர் கடைகள் என்பவற்றை மாத்திரமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ பலாங்கொடை நகர சபை தவிசாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வேறு எந்தவொரு விற்பனை நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்படாதெனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .