2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவரை, தென்னை மட்டையால் 100 அடியடித்த குற்றச்சாட்டில், பள்ளிவாசலொன்றின் நிர்வாக சபையைச் சேர்ந்த 4 பேரை, காலவரையறையின்றி விளக்கமறியலில் வைக்க, நீதவான் உத்தரவிட்ட சம்பவமொன்று, புத்தளம் - நல்லன்தெழுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

நல்லன்தெழுவ ஜூம்மாப் பள்ளிவாசலின் நிர்வாக சபையைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டார்.

குறித்த பெண், சில தினங்களுக்கு முன்னர், தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவரால் பலவந்தமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்ணால், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பில், பொலிஸ் விசாரணை நடந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை, பள்ளிவாசலுக்கு அழைத்துள்ள அதன் நிர்வாக  சபையினர், அப்பெண்ணை, 100 முறை தென்னை மட்டையால் தாக்கி, தண்டனை வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .