Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Janu / 2025 மே 22 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூன் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம், வியாழக்கிழமை (22) தீர்மானித்தது.
இந்த மனு உயலட நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனுவில், சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டியின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, ஏப்ரல் 8 ஆம் திகதி அங்கு வந்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் கூறுகிறார்.
பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க, அவர் மீதான விசாரணைக்காக அவரை 90 நாட்கள் தடுத்து வைக்க ஏப்ரல் 12 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago