Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
புகைப்பரிசோதனைக் கட்டணம், வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, புதிய வரிகளை அறிமுகம் செய்தமையால், பஸ்களை இறக்குமதி செய்யும் போது பஸ்ஸொன்றுக்கு 25 இலட்சம் ரூபாய், வரியாகச் செலுத்தவேண்டும்.
அதனடிப்படையில், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்ஸைக்கொள்வனவு செய்தால், அதற்கு 75 இலட்சம் ரூபாயைச் செலுத்தவேண்டியுள்ளது என்றும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025