2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து: சாரதி உட்பட 40 பேர் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, தம்புலுவன- கஹவத்த வீதியில் சென்ற வேளை, இரத்தினபுரி, தம்பலுவன பகுதியில் வைத்து 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து, இன்று சனிக்கிழமை (20) காலை 6.15க்கு இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.  

பஸ்ஸின் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த ஆடைத் தொழிற்சாலையின் 40 ஊழியர்களும்  இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத்; தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X