Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 35 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் பஸ் சங்கங்கள் இன்று (22) கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து லங்கா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,
2025 ஜூலை மாதம் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, ஒரு லீட்டர் டீசலின் விலை 289 ரூபாயாகவே கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லீட்டர் டீசலின் விலை 382 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு லீட்டர் டீசலில் பஸ் உரிமையாளர்களுக்கு 93 ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது. இந்த நட்டத்தைச் சுமந்து கொண்டு பஸ்களைத் தொடர்ந்து இயக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஸ் உரிமையாளர்கள் எவராவது தற்போதைய விலையில் பஸ்களை இயக்குவதாக இருந்தால், அவர்கள் டீசலுக்குப் பதிலாக நீரினையோ அல்லது மண்ணெண்ணெயையோ பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பஸ் கட்டணங்களை உடனடியாக 15 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 35 ரூபாயாக உயர்த்த வேண்டும். பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் 100 லீட்டர் டீசல் ஒரு பஸ்ஸிற்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் 'QR' குறியீட்டு முறையைச் சரியாகச் சீரமைத்து, பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கத் தவறினால், பஸ்கள் அனைத்தும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் என கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago