Freelancer / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதைவிட தடுப்பூசி ஏற்றுவதற்கு ஊக்கப்படுத்துவது தேசிய கடமை என்றும் இணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஆளுங்கட்சியின் பிரதான கொரடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கட்சிப் பகுபாடுகள் இன்றி, கொரோனா தொற்றுநோயை தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சிக்கு நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலை அமைச்சில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் கட்சி பாகுபாடு பார்த்துப் பரவுவதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago