2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் மரணம்

Freelancer   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை  (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து நீந்த  தொடங்கினர்.

அப்போது 3 மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .