2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவரின் கையை துண்டித்தவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் – யுனிபீல்ட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் பாடசாலை மாணவரின் கையை துண்டித்து வேறாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர் மற்றும் குறித்த சந்தேகநபருக்கிடையில் நேற்று (13) இரவு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாகவே, இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் டிக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவரை, மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த சந்தெகநபரின் வீட்டுக்கு சிலர் சென்று அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .