2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கு பூட்டு: சிறுமிகளுக்கு டும்...டும்...

Editorial   / 2022 ஜனவரி 18 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதால் சிறுமிகள் திருமணம் செய்வது அதிகரித்துள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-மந்திரிக்கு கடிதம்

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் சமீபத்தில் தான் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிறுவர்களுக்கு தொற்று பரவக்கூடாது என்ற அச்சம் காரணமாகவும் மராட்டியத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்தநிலையில் அவுரங்காபாத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி. சதீஷ் சவான், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாடசாலைகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு கூறி கடிதம் எழுதி உள்ளார். 

இதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிறுமிகள் திருமணம்

மராட்டியத்தில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூடி வைத்திருப்பதால் மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக படிக்கும் வயதில் சிறுவர்கள் வயல் வேலைக்கு செல்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. 

நேரடி வகுப்புகள் இல்லாத காரணத்தால் பாடசாலைகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எழுதுதல், வாசிப்பு திறன் மற்றும் அவர்களின் அறிவாற்றல் பாதிக்கப்பட்டு உள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் திரையரங்குகளில் 50 சதவீதம் திறனுடன் எவ்வாறு செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது. இதேபோல மாணவர்களுக்கு அறிவை புகட்டும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளையும் 50 சதவீத திறனுடன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். 

மந்திரி தகவல்

சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, “மராட்டியத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாலும், மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுவதாலும் பாடசாலைகளை மீண்டும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கை அடுத்த 10 அல்லது 15 நாட்களுக்கு பிறகு பரிசீலக்கப்படும்” என நேற்று


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .