2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்பட மாட்டாது’

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தபோவதாக பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், விடுமுறையில் சென்றுள்ள படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, சிறிய முகாம்களை அண்மித்துள்ள பாடசாலைகள் சிலவற்றை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.  
 
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X