2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாணந்துறையில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

5,000 ரூபாய் கொடுப்பனவை பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பிங்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேச சபையின் உறுப்பினரான சுஜித் பிரியந்த என்பவரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகச் சென்றபோது, பிரதேசத்திலிருந்த ஒருவர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

தாக்குதலுடன் தொடர்புடையவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X