Editorial / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை தம்மிக பெரேராவால், கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாணியைப் பருகிய ஐவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரக்காபொல, கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தையும் அவரது தாய் உள்ளிட்ட ஐவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள், தம்மிகவின் பாணியை அருந்தியதாக அவர்களால் சுகாதாரத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான ஐவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களைக் கவனத்தில் எடுக்காமல், பல மணி நேரம், நெருக்கடிமிகுந்த வரிசையில் நின்று, அந்தப் பாணியைப் பெற்றுக்கொண்ட பலருக்கு, கொரோனா வைரஸ் தொற்றும் என்ற அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சட்ட திட்டங்களைப் புறக்கணித்து, இவ்வாறான விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாமென அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026