2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பாதிக்கப்படுவோருக்கு நிதி நிவாரணம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணெண்ணெய் விலை திருத்தத்துக்கான அவசியம் பல வருடங்களாக கட்டாயமாக இருந்ததாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் தோட்டத் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செலவுகளுக்கு இணையான விலைகளுடன் நேரடி பண நிவாரணத்தை மேற்குறிப்பட்ட குடும்பங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கவே அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்றார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்கு மானிய விலையில்  மண்ணெண்ணெய் விற்பனை செய்தமையும் ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 87 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், 253 ரூபாயால் உயர்த்தப்பட்டு, 340 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .