2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (23) அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவைக்கு விஜயம் செய்தார்.

அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, நிவாரண வேலைத்திடம் தொடர்பாக கேட்டறிந்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சேமநல வேலைத்திட்டங்களை துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி இதன் போது அதிகாரிகளுக்கு வழங்கினார். நிவாரண பணிகள் 2 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .