Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில், பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்தாசை மற்றும் சேவைகள், தங்களுக்குத் தொடர்ந்தும் தேவையென எழுதப்பட்டுள்ள, பதாதைகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழில் மட்டுமே எழுதப்பட்டுள்ள மேற்படி போஸ்டர்கள் மற்றும் பதாதைகளில், “இராணுவம் இல்லையென்றால் எமது நிலையென்ன?”, “இராணுவத்தின் சேவைக்கு எமது நன்றி” போன்ற வாசங்களே அவற்றில் எழுதப்பட்டுள்ளன.
“வௌ்ள அனர்த்தத்தின் போது, தங்களைக் காப்பற்றியது தமிழ் அரசியல்வாதிகள் இல்லையென்றும், இராணுவத்தினரே தங்களைக் காப்பாற்றினர்” என்றும் கருத்துபட எழுதப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்கள் மற்றும் பதாதைகளுக்கு எந்தவோர் அமைப்பும் உரிமை கோரவில்லை.
பெரும்பாலான போஸ்டர்கள், வட மாகாண சபையால், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான விவரங்கள் தாங்கிய விளம்பரப் பலகைக்குக் கீழே, தொங்கவிடப்பட்டுள்ளன.
வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இராணுவத்தினரால் சில நாள்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. அந்த உணவுப்பொதிகளை எடுத்துச்சென்ற காட்போட் பெட்டிகளைக் கிழித்தும், வெற்று உரமூடைகளைக் கிழித்துமே, இவ்வாறு எழுதப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
38 minute ago