2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தவும்

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து கலாசாரத்துக்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியின்  (பா.ஜ.க)  நகர தலைவர் மயிலாடுதுறை பொலிஸ் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை பொலிஸ் நிலைய ஆய்வாளர் செல்வத்திடம் அளித்த புகார் மனுவில் அவர் கூறியதாவது,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில்இ பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.

இதில்இ நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே,கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவை காவல் நிலையத்தில் அளித்தபோது, பாஜக மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .