2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பிக் மீ சாரதி மீது தாக்குதல்

Janu   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருநெல்வேலி - பலாலி வீதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் மேற்கொண்ட  சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்றபோது பொலிஸாரும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக  பாதிக்கப்பட்ட பிக் மீ சாரதி கவலை வெளியிட்டுள்ளதுடன், பிக் மீ நிறுவனத்திற்கும் தகவலளித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நிறுவனம் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து, சாரதியை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு திங்கட்கிழமை (20) அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X