2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பிக்கு வேடமிட்டவரைத் தேடும் பொலிஸார்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்குவைப் போன்று வேடமணிந்து வந்த ஒருவரைத் ​தேடும் நடவடிக்கைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக மீகலெவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் பிக்குவைப் போன்று உடையணிந்து, ரஸ்வெஹர ரஜமஹா விகாரைக்குள் நுழைந்துள்ளதுடன், இவர் மேல் சந்தேகம் கொண்ட குறித்த விகாரையின் விகாராதிபதி அவரை விசாரித்த போது, சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக, அவர் தப்பிச் சென்ற கஹல்ல வனத்தில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .