2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பிடியாணை வாபஸ்

J.A. George   / 2021 மார்ச் 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு   கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(10) பிடியாணை பிறப்பித்தது.

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, பிடியாணை மீளப்பெறப்பட்டதுடன், வழக்கு விசாரணை ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .