Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Simrith / 2025 மார்ச் 30 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்து செல்வார்கள் என த சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாங்கொக்கில் "வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும். வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வர்த்தகம், தொடர்பு, பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாட சந்திக்க உள்ளனர்.
பிரதமர் அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், இது அவரது ஆரம்பகால சர்வதேச ஈடுபாடுகளில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
39 minute ago
47 minute ago
2 hours ago