2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பியதாச, மஹானாம குற்றவாளிகளாக அறிவிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை இன்று (19) பிறப்பித்துள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய  ஆகிய  நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

வழக்கு விசாரணை கடந்த 4 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் இலஞ்சமான பெற்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து, இருவரும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .