2024 மே 14, செவ்வாய்க்கிழமை

பிரதமருக்கு எதிரான எழுத்தாணை மனுவை ஆராய்வதற்கான திகதி அறிவிப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தானை மனு விசாரணையை இந்த மாதம் 31ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த எழுத்தானை மனு கொழும்பு  மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவலயால் தாக்கல் செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் குடும்ப நிறுவனமான லேக்ஹவுஸ் பிரிண்டர்ஸ் மற்றும் பதிப்பகம் ஆகியவற்றின் பிரதான பங்குதாரராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் இந்த நிறுவனத்தின் தனியார்  வருமானத்தை எதிர்பார்த்து பல அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் 91 (1) உ உறுப்புரைக்கமைய, அரசுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த இடைநிறுத்துவதற்கான நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி எழுத்தாணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X