Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.கமல்
ஐக்கிய தேசிய முன்னணிக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது எனத் தெரிவித்த அஜித் பி பெரேரா எம்.பி, பிரதமர் யார் என்பதையும் அந்த முன்னணியே தீர்மானிக்கும் என்றார்.
அலரி மாளிகையில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய முன்னணிக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. பெரும்பான்மை பலம் உள்ள ஒருவரைப் பிரதமராக நியமிக்கும் செயற்பாட்டை மற்றைய தரப்புகளிடம் கையளிக்க நாம் தயாரில்லை” என்றார்.
இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் 100 சதவீதம் ஒற்றுமையுடன் உள்ளனரெனத் தெரிவித்த அவர், “கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வது குறித்தும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
41 minute ago
53 minute ago