Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று (28) சந்தித்தார்.
சேவையை பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் பிரதமருடனான இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வரலாற்று நட்பை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு திருமதி.ஜனிதா ஏ லியனகேவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பணியாற்றினார்.
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவியான ஜனிதா ஏ லியனகே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.
குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago