2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிரதமர் அலுவலக வளாகத்தில் அலைபேசி பாவனை மட்டு

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரதமர் அலுவலகத்தின் ஸ்ரீமதிபாய கட்டடத்துக்குள் உள்நுழையும் வளாகத்தில் அனுமதியின்றி அலைபேசிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் எச்.ஏ சுனில் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தேவையற்ற அலைபேசி பாவனையால் ஏற்படும் பிரச்சினைகளாலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் எச்.ஏ சுனில் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மிக குறுகிய நாட்களுக்கு மாத்திரமே இந்த விடயம் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .