2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பிரதமர் தலைமையில் விசேட அமைச்சரவை

Editorial   / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பெப்ரவரி 1 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்ட தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுளது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் இன்று (19) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .