2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பிரதேசசபை உறுப்பினரை பேர வாவிக்குள் தள்ளிய ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்மறை சம்பவங்களின் போது, அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் பணப் பையை கொள்ளையிட்டு, அவரை பேர வாவிக்குள் தள்ளிய ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித் தெரு பகுதியில் வைத்து  கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 9ஆம் திகதி குறித்த பிரதேசசபை உறுப்பினர் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் உள்ளிட்ட சிலர், கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து, பஸ்ஸிலிருந்து பிரதேசசபை உறுப்பினரை கீழிறக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்ட பின்னர், அவரை பேர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .