2025 ஜூலை 23, புதன்கிழமை

“பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம்“

R.Tharaniya   / 2025 மார்ச் 30 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதோடு சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதிக்கு முன்பாக அவர்கள் ஞாயிற்றுகிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

போர் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை வித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளது அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர முடியும். 

இவ்வாறு தடை விதிக்க படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறு தடைகளை விதிக்க வேண்டும். அனைத்துலக நாடுகளும் இந்த பயண தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

இதுவே எமது எதிர்பார்ப்பு இதேவேளை 19 காணாமல் போன உறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றை கூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு  பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.

எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்நிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்றனர்.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .