Janu / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் திகதி குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தெமட்டகொட பொலிஸார், கடந்த மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை நடத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்று விசாரித்த போது சடலம் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago