2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்?

Freelancer   / 2025 ஏப்ரல் 15 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிள்ளையானுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

எனினும், குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடுவது சட்டவிரோதமானது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .