Freelancer / 2026 ஏப்ரல் 16 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிஹாரின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார். பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் பிஹாரின் முதல்வராவது இதுவே முதன்முறையாகும்.
சுமார் 21 ஆண்டுகளாக் பிஹார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.கவின் சாம்ராட் சவுத்ரி (57 வயது), நேற்று (15) பிஹார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
சாம்ராட் சவுத்ரி மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துக் கொண்டதோடு, 29 துறைகளின் கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உள்துறையை வைத்துக்கொள்வதன் மூலம், சட்டம் - ஒழுங்கு, பொலிஸ் நிர்வாகம் மற்றும் மாநிலப் பாதுகாப்பு ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பை சவுத்ரி மேற்கொள்கிறார். வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்டவை அவரது கூடுதல் துறைகளாகும்.
நேற்று மாலை லோக் பவனில் நடந்த நிகழ்ச்சியில், பிஹார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களான விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் பிஹார் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரிக்கு, உள்கட்டமைப்பு, நீர்வளம், சிறுபான்மையினர் நலன், கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பத்து துறைகள் ஒதுக்கப்பட்டன. பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட 8 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. (a)

6 minute ago
43 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
55 minute ago