2025 ஜூலை 05, சனிக்கிழமை

பீடைகளைக் கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிர்ச்செய்கைகளைப் பாதிக்கும் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கை, கலென்பிந்துனுவெவ சோளப் பயிர்ச்செய்கைக் காணியில் நேற்று (03) இடம்பெற்றது.

இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், பெருமளவில் சோளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சேனைகளுக்கும் இ​தனை விஸ்தரிப்பதற்கு, விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவசாய அமைச்சர் பி.ஹரிசன் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை, இலங்கையில் முதன்முறை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .