Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்துக் கோவில்களை, புனித ஸ்தலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு, நேற்றைய தினம் (23) விஜயம் செய்திருந்த அமைச்சர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், திருக்கேதீஸ்வரத்துக்குச் சொந்தமான ஆனாலும் இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும், மக்களின் பாவனைக்கும் கோவிலின் பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியதோடு, இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது நடைபெற்றுவரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான விபரங்களையும், இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago