2025 ஜூலை 24, வியாழக்கிழமை

புதிதாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கம்

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில், ஜனாதிபதியால் இரண்டு அதிவிசேட வர்த்தமானி  அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கியதாக இந்த ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் இந்த செயலணியில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கவுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .