Editorial / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத் தளபதி தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அடுத்த இராணுவத் தளபதிக்கான போட்டியில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சத்யப்பிரிய லியனகே, தர்ஷன ஹெட்டிளாராச்சி, குமுது பெரேரா உள்ளிட்ட நால்வர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போதைய இராணுவத் தளபதிக்கு சேவை நீடிப்பு அளிக்கப்படுமா அல்லது புதிய தளபதி நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வெளியாவில்லை.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு முன்னதாக இரண்டு முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago