2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘புதிய கட்சியை அமைக்க மாட்டேன்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் எவ்விதமான புதிய கட்சிகளையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து புதிய கட்சியை அமைக்க சந்திரிக்கா தயாராவதாக, கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து, கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அத்துடன் அழிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை நாம் கட்​டியெழுப்புவோமே தவிர புதிய கட்சியை அமைக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ள அவர், தான் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .