2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதிய கட்டுப்பாட்டுக்கு தொழில்முறை இணைய ஊடக அமைப்பு எதிர்ப்பு

Simrith   / 2025 மே 01 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக்கு கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்கு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டமைக்கு தொழில்முறை இணைய ஊடக அமைப்பு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளது,

இந்த தீர்மானம், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துகின்றது. தகவல்களை அணுகுவதற்கான பொதுமக்கள் உரிமை மீறப்படுவதாகவும். இது நாட்டின் ஜனநாயக பெறுமதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 செய்தி அறிக்கையிடல் மற்றும் தகவல்களை வெளிக் கொணர்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை ஊடகவியலாளர்கள் முன்னெடுக்கின்றனர். அதேபோல், தகவல்கள் பெற்று, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லும் மிக முக்கிய பணிகளையும் அர்ப்பணிப்புடன் ஊடகவியலாளர்கள் செய்கின்றனர்.

ஆகையால்,அரசாங்க தகவல் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், எங்களுடைய தொழில் சகாக்களின் தொழில் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும் என்பதுடன், ஊடக சுதந்திரத்தின் மீதான கடுமையான அச்சுறுத்தலாகும்.

 ஆகையால், எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்திடமும் அரசாங்க தகவல் திணைக்களத்திடமும் நாம் கேட்டுக்கொள்கிறோம். சகல ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எவ்விதமான இடையூறும் இன்றி, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பது எங்களுடைய  வலியுறுத்தலாகும்.

சுதந்திர ஊடக அறிக்கையிடல் மற்றும் தகவல் அறிவதற்கான மக்களின் உரிமைக்காக தொழில்முறை இணைய ஊடக அமைப்பு முன்னிற்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X