2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டது

Editorial   / 2022 ஜூன் 27 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய்யெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டிற்குள் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் திரிபு தொற்றிய நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்..

BA5 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து, மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் வைரஸ், தற்போது 63 நாடுகளில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஏனைய வைரஸ்களை விடவும், இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என இனங்காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X